கொழும்பில் இருந்து மும்பை சென்ற கப்பலில் தீ!!
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 18 ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் குதித்து தப்பியதாகவும் கூறப்படுகிறதுதீ விபத்துக்கான காரணம் குறித்தான தகவல் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய வான் ஹை 503 என்ற கப்பல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.