கொழும்புப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு!
கொழும்பு – ஹொரண வீதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பேஸ்லைன் வீதி விரிவாக்கத்தின் 3ஆம் கட்டப் பணிகளை மீள ஆரம்பிக்க அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிருலப்பனை சந்தியிலிருந்து துடுகெமுனு வீதி வரையிலான 0.86 கிலோமீட்டர் தூரத்தை 06 வழிப்பாதையாக அமைக்கும் இத்திட்டத்திற்குத் தேவையான 90% காணிகள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம் நிறைவடையும் போது கொழும்பு நகருக்கான பிரவேசம் இலகுவாகும் என்பதோடு, பொருளாதார ரீதியான பயனும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

You must be logged in to post a comment.