Local

கொழும்பு – யாழ் விமான சேவை ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிட விமானத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த போக்குவரத்து சேவை வாரத்தில் நான்கு நாட்கள் முன்னெடுக்கப்படும் என்றும், சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பம் : கட்டண விபரங்களும் வெளியானது
பன்னிரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 என்ற சிறிய ரக விமானம் இன்று இந்தப் பயணத்தில் இணைந்துகொண்டது.

ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.

இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஏழு கிலோ அளவான பொருட்களை கொண்டு செல்ல முடியும் எனவும், யாழ்ப்பாணம் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் எனவும் முகாமையாளர் அருண ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading