Local

கொவிட் தடுப்பூசி பக்கவிளைவுகள் தொடர்பில் ஆராய நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியின் பாவனையை சில உலக நாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இந்த நிலையில், இலங்கையில் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading