கோத்தபாய ராஜபக்சவுக்கு நினைவில்லையாம்..!!
லலித் வீரராஜ் (Lalit Weeraraj) மற்றும் பிரகீத் எக்னெலிகொட (Prageeth Ekneligoda / Kugan) ஆகியோரின் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர் போதல ஜெயந்த (Poddala Jayantha) குறித்துக் கேட்கப்பட்ட போது அந்த நபரைத் தமக்கு நினைவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
லலித் – குகன் சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சியங்களை வழங்குவதற்காகக் கோட்டாபய ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்து, அங்கிருந்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துடன் இணைந்து சாட்சியமளித்துள்ளார். முன்னதாக இடம்பெற்ற விசாரணைகளிலும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சகல சேனாரத்ன கடத்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது போதல ஜெயந்த குறித்த கேள்விக்குத் தமக்கு நினைவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.