World

கோயிலில் நடந்த புத்தாண்டு பூஜையில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் புத்தாண்டு பூஜையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் சக்திவாய்ந்த வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோயிலில் வழிபட காஷ்மீர், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தம் அளிக்கிறது.

பக்தர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும் உயிர் இழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading