Cinema

பிரபல நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு வெளியானது!

மலையாளம் ஹீரோ மம்மூட்டியின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

சினிமாவில் டாப் ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் மம்மூட்டி. இவரது ரசிகர்கள் மெகா ஸ்டார் என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். தேவலோகம் என்ற மலையாள படத்தில் தான் மம்மூட்டி நாயகனாக அறிமுகமானார்.

ஆனால் அந்த படம் முழுமையாக முடிக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்தார் மம்மூட்டி.

மம்மூட்டி மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இப்போது மம்மூட்டி நடிப்பில் நான்கு மலையாள படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் மம்மூட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.306.68 கோடி என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இவரது ரசிகர்கள் இத்தனை கோடியா என்று அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.     

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading