Lead NewsLocal

சஜித்தின் இதயத்தை நிராகரித்த மஹிந்த!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியின் கீழ் ‘இதயம்’ சின்னத்தைப் பயன்படுத்த சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகாவின் நெருக்கமான ஒருவரான சேனக்க என்பவருக்குச் சொந்தமான ‘அப்பே ஜாதிக பெரமுன’ என்ற கட்சியின் பெயரை மாற்றி ‘சமகி ஜாதிக பலவேகய’ (ஐக்கிய தேசிய சக்தி) என்று பெயரிடவும், அந்தக் கட்சியின் தொலைபேசி சின்னத்தை மாற்றி ‘இதயம்’ சின்னத்தைப் பயன்படுத்தவும் சஜித் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், இந்தக் கோரிக்கை கிரமப்படி விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், முறையான ஆவணங்களுடன் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்துப் பரிசீலனை செய்யமுடியும் என்று சஜித் தரப்புக்கு அறிவித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading