Local

சஜித் கூட்டணியின் தேசியப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாக அறியமுடிகின்றது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளைப்பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏழு தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் உறுதியளிக்கப்பட்டவாறு தமது கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் தலைவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், தமது அணியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் முடிவிலேயே சஜித் இருந்தார். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து தேசியப்பட்டியல் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தேசியப்பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1) ரஞ்சித் மத்துமபண்டார -ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்

2) ஹரின் பெர்னாண்டோ-தேசிய அமைப்பாளர்

3) இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

4) திஸ்ஸ அத்தநாயக்க

5) ஏரான் விக்கிரமரத்ன

6) மயந்த திஸாநாக்க (நவீன் திஸாநாயக்கவின் தம்பி)

7) டயானா கமகே

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading