Cinema

சமந்தாவிற்கு குரல் கொடுக்க முடியாது சின்மயி தெரிவிப்பு!

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி, இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் பாடுவது மட்டுமில்லாமல் பல கதாநாயகிகளின் கதாபாத்திரத்திற்கு குரலும் கொடுத்துள்ளார். அந்த வகையில் சமந்தா நடித்த பல தெலுங்கு படங்களுக்கு சின்மயி குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் சமந்தா தெலுங்கில் நன்றாக பேச கற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சமந்தா அவரது படங்களுக்கு அவரே குரல் கொடுத்துவருகிறார். அவருடன் எனது டப்பிங் பயணம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என வருத்தத்துடன் சமீபத்தில் சின்மயி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா, சின்மயி இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.      

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading