Local

சமூக வலைத்தளங்களில் போலி பிரச்சாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை பரப்பிய சுமார் 400 சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் முன்னாள் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள், வைத்தியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading