Cinema

சினிமா துறையில் அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்..

நடன அமைப்பாளர், நடிகர், மற்றும் இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டவராக அறியப்படும் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி, சினிமா துறையில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது தனித்துவமான டான்ஸ் அசைவுகளால் அமர்க்களம் படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராகவா லாரன்ஸ்.

சினிமா துறையில் அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்.. அமெரிக்காவில் என்ன படிச்சாங்கன்னு தெரியுமா? | Raghava Lawrence Daughter To Debut As Director

ராகவா லாரன்ஸ் நடன கலைஞராக இருந்து தனது உழைப்பாலும் திறமையாளும் மட்டுமே டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தவர். இவரின் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

‘முனி’ படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்ததுடன், அதில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படம் ஹிட் கொடுத்தது.

அதனையடுத்து, பேய், அமானுஷ்ய படங்களிலேயே முழு கவனத்தை செலுத்தினார். அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது குழந்தைகளின் மத்தியிலும் அமோக வரவேற்று காணப்படுகின்றது.

சினிமா துறையில் அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்.. அமெரிக்காவில் என்ன படிச்சாங்கன்னு தெரியுமா? | Raghava Lawrence Daughter To Debut As Director

டான்ஸ் மாஸ்டர், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், என அத்தனை துறைகளிலும் வெற்றி கண்ட இவர், தான் தனது தொழில் என அதை மட்டும் கவனித்துக்கொண்டு மற்றவர்களை போல் சுயநலமாக இல்லாமல், ஏராளமான சமூக பணிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.

தற்போது காஞ்சனா நான்காம் பாகத்தை எடுத்து வருகிறார். அது மட்டுமின்றி லோகேஷின் LCUவில் பென்ஸ் என்ற படத்தில் அவர் நடித்து வருகின்றார்.

லாரன்ஸின் முந்தைய படங்களான சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து அவரது ரசிகர்கள் காஞ்சனா 4 படத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சினிமா துறையில் அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்.. அமெரிக்காவில் என்ன படிச்சாங்கன்னு தெரியுமா? | Raghava Lawrence Daughter To Debut As Director

நடிகர் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி அமெரிக்காவில் சினிமா பற்றிய படிப்பை முடித்து தற்போது நாடு திரும்பியுள்ளார்.

அவரை விரைவில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த லாரன்ஸ் முடிவெடுத்து இருக்கிறாராம். விரைவில் ராகவா லாரன்ஸ் மகள் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு வரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சினிமா துறையில் அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்.. அமெரிக்காவில் என்ன படிச்சாங்கன்னு தெரியுமா? | Raghava Lawrence Daughter To Debut As Director

பொதுவாக நட்சத்திர வாரிசுகள் நடிப்பைத் தேர்ந்தெடுக்கும் திரையுலகில், ராகவி தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக்கொள்கிறார். அவர் கேமரா முன் நிற்காமல், ஒலிபெருக்கியுடன் இயக்குநர் இருக்கையில் அமர்கிறார்.

அவர் வழக்கமான பாதையிலிருந்து விலகி, திரைப்படத் தயாரிப்பில் கவனம் செலுத்துவதால், இந்த முடிவு திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading