Local

சிறுமியை துஷ்பிரயோகம்செய்த கான்ஸ்டபிள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக கடமை இடைநிறுத்தப்பட்டு, நான்கு வருடங்களாக தலைமறைவாகியிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, மொனராகலைப் பொலிஸார் இன்று (13-08-2020ல்) கைது செய்துள்ளனர்.

இப் பொலிஸ் கான்ஸ்டபிள் பெண் சட்டத்தரணியொருவரை சட்டப்பூர்வ திருமணம் செய்து, பின்னர் அவரை விவாகரத்து செய்த நிலையில், அப் பெண் சட்டத்தரணியின் சகோதரியினது பத்து வயது நிரம்பிய மகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இது குறித்து, மொனராகலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றியைடுத்து, குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்ளை கைது செய்ய முயன்றும், அந் நபர் தலைமறைவாகியிருந்ததினால் உடன் கைது செய்ய முடியாமல் போயுள்ளது.

இக் குற்றச் செயல் குறித்து, பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆதாரப் பூர்வமான முறைப்பாட்டின் பேரில், பொலிஸ் திணைக்களத்தினால் இப் பொலிஸ் கான்ஸ்டபிள்ளுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினையடுத்து, அப் பொலிஸ் கான்ஸ்டபிள் கடமை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.

மேலும் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வந்த நடவடிக்கைகளின் பின்னர், நான்கு வருடங்களுக்குப் பின்னர் மாற்றும் பெயர் மற்றும் மாற்று வேடத்திலிருந்த இப் பொலிஸ் கான்ஸ்டபிள் வகையாக மாட்டிக் கொண்டு, இன்று 13-08-2020ல் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இந்நபர் விசாரணையின் பின்னர், மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, மொனராகலைப் பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading