Sports

சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை?

சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்ற கேள்விக்கு,சீன பிரதமர் லீகியாங்கின் பதில்!
“நாங்கள் ஒரு நாளில் சிறுபகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக்கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக்கொள்வதில்லை. இந்தியர்களின் ஆர்வத்தைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது”என்பதாகும்.

சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம்.
இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும், மற்றும் கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம். ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.
ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம். வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன.

கோடைக்கால விடுமுறையை மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும் இந்த ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது.
பின்னிரவு வரை நடைபெறும் ஆட்டத்தால் மக்களின் மறுநாளைய பணிகள் சீர் குலைகின்றன. 

ஒரு சில தனியார் அமைப்புகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும் இரு மாத காலம் ஐ.பி.எல். லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது அதர்மம் மட்டுமல்ல,  சினிமா மற்றும் டாஸ்மாக் போதையில் அகப்படாதிருந்த வெகு சில இளைஞர்கள் கூட இந்த ஐ.பி.எல். போதைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல.
இளைஞர்கள் மட்டுமல்ல, (சில கூலித் தொழிலார்கள் தவிர) ஆண், பெண் என அனைவருமே அடக்கம். ஏன் இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர்க் கூட உறுப்பினர்கள் இன்றி காணப்படும் அவலம்.
அனேக விளையாட்டுகள் உடலினது வலிமையை, தாங்கு திறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, மன நலத்தை, சமூக நலத்தை, ஒற்றுமையை, தலைமைத்துவத் தன்மையை வளர்கிறது என்பது உண்மையே.

#யாருக்கு? விளையாடுபவர்க்கு…

இங்கே 20 பேர் விளையாடுவதை 20 கோடி பேர் இருந்த இடத்தை விட்டு நகராமல், பல மணி நேரத்தை, பல நாட்களை வீணாக்குவதால், பொருளாதாரம், நல்லவற்றை கற்றல், உடல் நலம், மற்றும் வெற்றி தோல்வியால் ஏற்படும் பிரச்சனைகள் என தொடர்வதால், இது நமக்கு நன்மையா? தீமையா?

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading