Local

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் களைகட்டும் வெசாக்

வருடாந்தம் மே மாதம் பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும்.

அந்தவகையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து இத்தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.

கால்ட்டன் இல்லத்தில் தனது இளைய மகன் ரோஹித்த ராஜபக்ச, அவருடைய மனைவி, பேரக்குழந்தையுடன் வெசாக் கூடுகளை பிரதமர் தனது பாரியார் சிரந்தி ராஜபக்சவுடன் செய்துவருகின்றார்.

இது குறித்த புகைப்படங்கள் வைரலாகப் பரவிவருகின்றன.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெசாக் நோன்மதி தினம் இம்முறை இலங்கையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடப்படுகின்றதது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading