Local

சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டாலும் வைத்தியசாலைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே பற்றாக்குறையாக நிலவுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading