Local

சுற்றாடல் அமைச்சருடன் ஜப்பானியத் தூதுவர் சந்திப்பு!

அரசியல் கொதிநிலை நவ சுற்றாடல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கௌர. பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று(27) ஜப்பானியத் தூதுவரை (Mizukoshi Hideaki) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும், புதுப்பிக்கத்தக்க வலுவை, சுற்றாடல்துறையில் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகள் குறித்தும் அமைச்சர் அளவளாவினார்.

இச்சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜேசிங்க மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading