World

ஜனாதிபதி மீது தக்காளி வீச்சு!

மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மேக்ரான் பாரிசின் வடமேற்கில் உள்ள செர்ஜி பகுதியில் உணவு சந்தை ஒன்றில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் ஜனாதிபதி மீது குறிவைத்து தக்காளியை வீசினார். இதைக் கண்டு சுதாகரித்த பாதுகாவலர்கள் குடையை பிடித்து இம்மானுவேல் மேக்ரானை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வணிக சார்பு சீர்திருத்தங்களில் அவர் அழுத்தம் காட்டுவதால் அவருடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்தது போலவே தெருப் போராட்டங்கள் மீண்டும் நடைபெறலாம் என்று பலர் கூறுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading