Local

ஜனாதிபதி அநுர – ரணில் இரகசிய சந்திப்பா…!!!

அரசாங்கம் – இந்த மாதம் கவிழும், அடுத்த மாதம் முடிந்து விடும் என குறி சாத்திரம் கூறி களைபடைந்து இப்போது சர்வகட்சி அரசாங்கம் என்று கூறி திரிகிறார்கள்.

இந்த அரசு அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து பல்வேறுபட்ட பலிக்காத ஜோசியங்களையும் ஆருடங்களையும் அள்ளித் தெளிக்கிறார்கள்.
இப்போது கூறியுள்ள ஆருடம் – அநுரவும் ரணிலும் சந்தித்து இருக்கிறார்களாம்.

இந்த கதை உண்மையா? NPP அரசு இன்று பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை வைத்திருக்கிறது. அப்படியான நிலையில், தங்களுக்கே அரசியல் ஆபத்தாக முடியும் ஒரு “தேசிய அரசாங்க” முயற்சிக்கு ஏன் செல்ல வேண்டும்?

அப்படியே செல்ல வேண்டிய தேவை இருந்தாலும், இப்போது ஒரு எம்பி பதவியைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் நிற்கும் ரணில் விக்ரமசிங்க தரப்பிடம் ஏன் அரசாங்கம் சென்று நிற்க வேண்டும்?

அதிலும், முன்பு ஆண்ட யாரும் வேண்டாம் என அனைவரும் புறந்தள்ளிவிட்டு மக்கள் அளித்த ஆணையினைக் கொண்டு போய் மீண்டும் புறக்கணிக்கப்பட்டவர்களிடம் இந்த அரசாங்கம் கொண்டு போய் கொடுக்கும் என்பதெல்லாம் நடைபெறவே முடியாத ஒன்று.
அதற்காக மக்கள் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கவும் இல்லை.

இதில் அரசியல் logic இல்லை. ஆனால் ஒரு propaganda logic இருக்கிறது. அதாவது,
நாட்டில் அரசியல் நிலைத்தன்மை இல்லை, அரசாங்கம் தனியாக இயங்க முடியவில்லை, பின்னணியில் ரணில் தேவைப்படுகிறார் என்ற சந்தேகத்தை மக்களிடம் விதைப்பதே இத்தகைய கதைகளின் நோக்கம்.

இது news அல்ல. இது analysis கூட அல்ல. இது “ஒருவர் சொன்னார், மற்றொருவர் கேட்டார், இன்னொருவர் பரப்பினார்” என்ற அரசியல் வதந்தியின் ஒரு மேம்பட்ட வடிவமைப்பு.

அறுதிப் பெரும்பான்மை பெற்ற அரசாங்கம் தன்னைத்தானே பலவீனப்படுத்திக் கொள்ளும் முடிவை எடுக்கும் என நினைப்பது அரசியல் அறியாமை.
அல்லது மக்களை அறியாமையாக வைத்திருக்க முயலும் திட்டமிட்ட முயற்சி அவ்வளவு தான்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading