World

டொலருக்கு முடீவு? புதிய முயறீசியில் சீனா – ரஷ்யா..!!

உலகளாவிய நிதித்துறையிலும் வர்த்தக சந்தையிலும் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான அனைத்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களும் இனி இரு நாடுகளினதும் சொந்த நாணயங்களான ரூபிள் (Ruble) மற்றும் யுவான் (Yuan) மூலமே பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முறையான கட்டமைப்பு மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

​இரு நாடுகளுக்கும் இடையே எடுக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த இராஜதந்திர நடவடிக்கை மூலம், உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து இருதரப்பு பொருளாதார உறவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அதிபர் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பொருளாதாரம், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் 40 க்கும் மேற்பட்ட இருதரப்பு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading