World

ஜெயலலிதாவை சந்திக்க சென்ற சசிகலாவின் ஆதரவாளர்களின் பணம் செல்போன் திருட்டு!

சென்னை மெரினா கடற்கரைக்கு சசிகலா வந்தபோது, கூட்டத்தில் தொண்டர்களிடம் இருந்து 6 செல்போன் மற்றும் 45ஆயிரம் ரூபாய் பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.

அதிமுக பொன்விழாவையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார். அப்போது சுமார் 1000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இங்கு கூடியதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சாந்தகுமார், பேச்சி முத்து, முனுசாமி உட்பட 6 தொண்டர்களிடம் இருந்து 6 செல்போன் மற்றும் ரமேஷ், பரத்குமார்,பாபு ஆகியோரின் பர்ஸிலிருந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading