World

பிட்காயின் மூலம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தீர்மானம்!

பிட்காயின் மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரபல நகரம் எடுத்த முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள மியாமி நகரத்தின் மேயர் பிரான்சிஸ் சூவாரீஸ். இவர் கிரிப்டோ கரன்சியின் வர்த்தக மையாமாக அந்த நகரத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மியாமியின் அரசு ஊழியர்களுக்கு பிட்காயின் மூலம் ஊதியம் வழங்க திட்டமிட்டிருந்தது. அதேப்போல் மியாமி நகர குடிமக்களும் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி நகர வரிகள் செலுத்தவும் ஏற்பாடுகளை செய்வதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவும் அந்நகரத்தின் மேயர் ப்ரின்ஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிட்காயினில் முதலீடுகளை செய்ய மியாமி அரசு முன்பே திட்டமிட்டிருந்தது, ஆனால் புளோரிடோவின் உள்ளூர் அரசு வரம்புகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனால், மியாமியின் மேயர் இந்த அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சியின் தீவிர ஆதரவாளர்களான எலான் மஸ்க் மற்றும் எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயீப் புகலேவுடன் இணைந்து வலுவான பிட்காயின் சமூகத்தை உருவாக்கப் போவதாகவும் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading