ஞாயிறு முதல் சவுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது!

எதிர்வரும் ஞாயிற்று கிழமை(17) முதல் சவூதி அரேபியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகிறது.
இதன்படி இனிமேல் பொது இடங்களில் சமூக இடைவெளி பேண வேண்டியதில்லை. மற்றும் மாஸ்க் அணியத்தேவை இல்லை.
எனினும் புனிதஸ்தலங்களுக்குள் மாத்திரம் அதன் பணியாளர்களும், பார்வையாளர்களும் மாஸ்க் அணிதல் வேண்டும்.
வணக்கவழிபாடுகளில் இனிமேல் சமூக இடைவெளிகள் இல்லையெனவும்,
புனித மக்காஹ் மற்றும் மதீனா பள்ளிவாசல்களின் முழுப்பரப்பிலும் முழுமையாக வணங்கி வழிபடவும் அனுமதி வழங்கப்படுகிறது.
சவூதி அரேபியாவில் சுமார் 54 லட்சம் பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இதுவரை 8758 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
