Sports

டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகளை கணித்து கூறிய முன்னாள் வீரர்!



ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ்சோப்ரா கூறியுள்ளார்.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான அணி வீரர்களின் பட்டியலை, செப்டம்பர் 10-ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால், உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டுவிட்டன.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சமூகவலைத்தள பக்கம் மூலம் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இந்த டி20 தொடரில் எந்த நான்கு அணிகள் தகுதி பெறும் என்ற ரசிகரின் கேள்விக்கு ஆகாஷ் சோப்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு என பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading