Local

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தால் கொவிட் தொற்று இறப்பு எண்ணிக்கை குறைந்தது!


தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா?என்பது குறித்து அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப் படும் போது உரிய தருணத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்ட அமுல்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதி மாற்றப்பட்டால், அது மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொ ரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது என்றும் இந்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றாளர்களின், உயிரிழப் போரின் எண்ணிக்கை மேலும் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் காரணமாக நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், அதனால் சில தளர்வுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading