World

டோங்கா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் டோங்காவிற்கு தென்மேற்கே 280 கிமீ (174 மைல்) தொலைவில் 167.4 கிமீ (104 மைல்) ஆழத்தில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் (EMSC) ஆரம்பத்தில் ஃபிஜி தீவுகளின் தெற்குப் பகுதிக்கு அருகே நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக தெரிவித்திருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading