Local

முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய கணக்கு மதிப்பீடுகளின் கீழ் 2023 முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பிற மைக்ரோ பொருளாதார குறிகாட்டிகளின் மதிப்பீடுகளை இன்று வெளியிட்டனர்.

அதன்படி, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.5 சதவீதம் வீழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விவசாய பொருளாதார நடவடிக்கைகள் 0.8 சதவீதம் சிறிதளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் முறையே 23.4 சதவீதம் மற்றும் 5.0 சதவீதம் பின்னடைவை பதிவு செய்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகளின் பங்களிப்பு முறையே 8.0 சதவீதம், 28.7 சதவீதம் மற்றும் 58.2 சதவீதம் ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading