தங்கம் ஏன் துருப்பிடிப்பதில்லை?

தங்கம் ஏன் துருப்பிடிக்காது?
தங்கமும் சாதாரண உலோகம் தானே தங்கத்திற்கு ஏன் இவ்வளவு விலை? என மனதில் தோன்றுபவர்களுக்கு, தங்கத்தின் சில தனிச்சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்கம் துருபிடிக்காது
தங்கத்தை அணியும் போது உடலில் எந்த பக்க விளைவும் வராது
பார்க்க பளபளப்பாக அழகாக இருக்கும்
தங்கம் ஏன் துருப்பிடிக்காது? இந்த ஒரே காரணத்தால் தான் தங்கத்திற்கு இவ்வளவு மதிப்பு (விலை).
முதலில் துருப்பிடித்தல் என்றால் என்ன? என பார்ப்போம்.
உலோகமானது சுற்றுச்சூழலில் உள்ள ஈரப்பத்துடன் (அதாவது ஆக்ஸிசன் மற்ற வாயுக்கள்) வினைபுரிந்து உலோக கலைவையாகும் மாறும். இந்த நிகழ்வே துருப்பிடித்தல் எனப்படும்.
உலோகங்கள் : Fe, Mg, Mn
உலோக கலவை : Fe2O3, MgCO3, MnO2
உதாரணமாக,
இரும்பு (Fe, உலோகம்) துருப்பிடித்தல் மூலம் இரும்பு ஆக்சைஇந்த நிகழ்வு நடக்க காரணம் என்ன? மேலே உள்ள நிகழ்வை வேறு ஒரு மாதிரியும் சொல்லலாம்.
அதாவது உலோகங்கள் பூமியில் அதன் இயல்பு நிலையில் (நிலையான நிலை) உலோக கலவையாக கிடைக்கின்றன. இந்த கலவையிலிருந்து பின்னர் உலோகங்கள் (நிலையற்ற நிலை) பிரித்தெடுக்கப்படுகிறது.
இந்த உலோகங்கள் ஈரப்பதத்துடன் வினை புரிந்து அதன் இயல்பு நிலைக்கு (உலோக கலவை) செல்வதே துருப்பிடித்தல் ஆகும்.
நாம் பூமியிலிருந்து உலோகத்தை பிரித்தெடுக்கிறோம் அதனால் உலோகம் பழைய நிலைக்கு செல்ல துருப்பிடிக்கிறது என எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக இந்த உலோக கலவை என்பது ஆக்ஸைடு, சல்பைடு, சிலிகேட்ஸ் சேர்ந்த உலோகங்கள் ஆகும்.டு (Fe2O3, உலோக கலவை) ஆக மாறுவது.மேலே உள்ள அட்டவணையை பார்த்தால் தெரியும் மற்ற உலோகங்கள் அதன் கலவையான கிடைக்கிறது.
உதாரணமாக அயன் (Fe) அதன் கலவை அயன் ஆக்ஸைடு (Fe2O3) லிருந்து பிரித்தெடுக்கப்படும். மெக்னீசியம் (Mg) அதன் கலவை மெக்னீசியம் கார்பனேட் (MgCO3) லிருந்து பிரித்தெடுக்கப்படும்
ஆனால் தங்கம் (Au) மட்டும் பெரும்பாலும் அதன் இயல்பு நிலையில் கிடைக்கிறது. தங்கம் உலோகக் கலவை அல்ல. சில சமயங்களில் டெல்லுரைட் கலவைகயாக கிடைக்கும்.
இதனை பிரித்து சுத்தப்படுத்தினால் அதற்கு இயல்பு நிலையில் தான் இருக்கும். இதனால் தங்கம் (Au) ஈரப்பதத்துடன் வினை புரிவதில்லை.
தங்கம் அதன் இயல்பு நிலையில் உலோகமாகவே கிடைப்பதால் அது துருபிடிப்பதில்லை.

