Local

தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகளா?

தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்த விடயம் பத்திரிக்கையொன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்த தலைப்பு செய்தி எழுதப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பொது மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் நம்பகத்தன்மை இதனால் சீர்குலைக்கப்படுகிறது” என அவர் மெலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading