Sports

ஹர்பஜன் சிங் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பாக பங்கேற்ற ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக தமிழில் பதிவு செய்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததன. அவரை திருவள்ளூர் போல் ரசிகர்கள் சித்தரித்திருந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

தமிழில் பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கொல்கத்தா அணி சார்பாக பங்கேற்றார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் தனது மனைவி கீதாவும், குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

ஹர்பஜனுக்கும் அவரது மனைவி கீதாவுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஹினயா என்ற மகள் உள்ள நிலையில், இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading