Local

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு விஷேட அறிவித்தல்!

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய கோவிட் நிலைமை தொடர்பில் கருத்து வொளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் தற்போது கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த அடிப்படையிலே 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தினை பொறுத்தவரையில் 30 வயதுக்கு மேற்பட்ட 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் வடக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள்.

அவர்களில் முதலாவது டோஸ் தடுப்பூசி 5 லட்சத்து 58 ஆயிரத்து 131 பேருக்கு இன்று வரை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 30 வயதுக்கும் மேற்பட்டோரின் சனத்தொகையில் 85 சதவீதமானோருக்கு முதல் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்று வரை இரண்டாவதுகட்ட தடுப்பூசி இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து அறுபத்தி ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் சனத்தொகையில் 45 வீதமனோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading