World

மனைவியை ஆபாசமான விடயங்களை செய்ய வற்புறுத்தியதால் மனைவி கணவன் மீது புகார்!

கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில் உள்ள மனைவியிடம் வீடியோ அழைப்பில் ஆபாசமான விடயங்களை செய்ய கேட்ட கணவன் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பல விடயங்களை புகாராக பாதிக்கப்பட்ட 30 வயது இளம்பெண் கண்ணீர்மல்க பொலிசாரிடம் கொடுத்துள்ளார். அதில், திருமண தகவல் இணையதளம் மூலம் நபர் ஒருவரை குடும்பத்தார் சம்மதத்துடன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி திருமணம் செய்து கொண்டேன்.

திருமணம் ஆன அடுத்த நாளே மது குடித்துவிட்டு வீட்டுக்கு என் கணவர் தாமதமாக வந்தார். தினமும் இதுவே தொடர்ந்த நிலையில் என்னை அடித்தும் துன்புறுத்தினார். பின்னர் அடுத்த சில நாட்களில் என்னிடம் சொல்லாமல் கனடாவுக்கு அவர் சென்றுவிட்டார்.

அங்கிருந்து அருவருப்பான மற்றும் ஆபாச மெசேஜ்களை எனக்கு அனுப்பினார். மேலும் போனில் மோசமாக பேசியதோடு, வீடியோ அழைப்பில் என் உடைகளை கழட்டுமாறு கூறினார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் என் மாமனார், மாமியாரிடம் என்னை கொடுமைப்படுத்துமாறு தூண்டினார். இதையடுத்து வரதட்சணை கேட்டு என்னை அவர்கள் அடித்து துன்புறுத்தினார்கள். இதன்பிறகு என்னையும் கனடாவுக்கு அழைத்து செல்லுமாறு கணவரிடம் கூறினேன், ஆனால் என்னை அவர் பிரியவிரும்புவதாகவும், திருமணத்தை ரத்து செய்ய நினைப்பதாகவும் கூறினார்.

என் குடும்பத்தாரிடம் இது பற்றி கூறி சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. அதனால் தான் இனியும் பொறுக்க முடியாது என பொலிசில் என் கணவர் வீட்டார் செய்யும் கொடுமைகள் குறித்து புகார் கொடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading