World

தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டொலர் பரிசு!

அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டொலர் பரிசு வழங்குமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ,அண்மையில் நியுயார்க்கில் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டொலர் பரிசு என்று மாநகர மேயர் அறிவித்திருந்தார். இதனை அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் ,இது குறித்து விளக்கம் அளித்த அதிபர் ஜோ பைடன், கொரோனாவுக்கு எதிரான யுத்தம் தொடர்வதாகத் தெரிவித்தார். புதிய சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய ,அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading