Technology

தண்டவாளத்திலும் வீதியிலும் இயங்கக்கூடிய வாகனம் கண்டுபிடிப்பு!

தண்டவாளத்திலும், வீதியிலும் இயங்கக்கூடிய வாகனமொன்று ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு மினி பஸ்போன்று  வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாகனமானது வீதியில் செல்லும் போது றப்பர் டயரிலும், தண்டவாளத்தில் செல்லும்போது இரும்பு சக்கரங்களிலும் செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதில்  21 பேர் வரை பயணிக்க முடியும் எனவும்,  100 கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்பஸ்ஸானது  ஜப்பானிலுள்ள டோகுஷிமா என்னும் மாநிலத்தில் நாளையிலிருந்து பயன்பாட்டிற்கு வரவுள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading