Features

தனித்துப் போகும் மனிதன் தவிக்கப் போகிறான்!

முன்னோர் காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது
காலையில் எழுப்பிட அப்பா
வேண்டாம் – Alarm இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் – step counter இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம் – zomato, swiggy app இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் – Uber, OLA app இருக்கு!

விலாசம் அறிய டீ – கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!

மளிகை வாங்க
தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் – Big Basket இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் –
Amazon , Flipkart app இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் –
What’s up, facebook இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும், அங்காளியும்
தேவையில்லை – Paytm app இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு…
App என்னும் ஆப்பு!!!

உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க!
விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!

சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!
விழித்தெழந்து விடை கொடு..!

செல்லின் அடிமையாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து ஓர்
வலை பின்னுவோம்…..!

– நன்றி: முகநூல் பதிவு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading