Cinema

நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தவசி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு இலவச சிகிச்சை அளித்து பேருதவி புரிந்திருக்கிறார், திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன். அதன்பிறகு, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிடோர் உதவினார்கள். அவர்களையடுத்து, நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்கள். ரோபோ ஷங்கர் தவசியை சந்தித்து உங்கள் புகைப்படத்தைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது.

மன உறுதியோடு இருங்கள். உங்கள் மீசையைப் பழையப்படி பார்க்கவேண்டும். ஐ ஆம் ஃபேக் சொல்லுங்க  என்று நம்பிக்கையூட்டினார். இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 60. நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் அப்பாவாக தவசியின் கருப்பன் குசும்புக்காரன் காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading