World

தன் மகளையே திருமணம் செய்துகொண்ட காதலனை சுத்தியால் அடித்துக் கொன்ற மூதாட்டி!

மும்பையில் தனது மகளை திருமணம் செய்த காதலனை 70 வயது பெண் ஒருவர் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

மும்பை மத்திய பகுதியில் வசிப்பவர் சாந்திபால்(70). இவரின் காதலன் பிமல் கண்ணா(57). இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சாந்திபாலுக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகள் இருக்கும் நிலையில், பிமல் கண்ணா அடிக்கடி சாந்திபாலை பார்க்க வந்த போது, அவரின் மகளுடனும் தொடர்பு ஏற்பட்டது. இதில் பிமல் கண்ணாவும் சாந்திபால் மகளும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்த போது சாந்தி பால் அதிர்ச்சியடைந்தார். இரவில் பிமலுடன் சாந்திபால் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தில் சாந்தி வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து பிமலை தாக்கியுள்ளார்

ஏற்கனவே மூளையில் ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த பிமல் மயங்கி விழுந்தார். மறுநாள் காலையில் பிமலை சாந்திபால் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் அவரை சோதித்து பார்த்த போது விமல் இறந்திருந்தார். பிரேத பரிசோதனையில் பிமல் தாக்கப்பட்டதால்தான் இறந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் சாந்தியை பிடித்து விசாரித்த போது பிமலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸாரின் விசாரணையில், சாந்தி 1984-ம் ஆண்டு கலவரத்தின் போது பஞ்சாப்பில் இருந்து தனது மகளுடன் மும்பைக்கு வந்தார். மும்பையில் பிமல் தனது இடத்தில் தங்க இடம் கொடுத்தார். அதோடு பிமலுடன் சாந்திபால் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார் என்று விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் சாந்தியின் முதல் திருமணத்தில் பிறந்த மகளை பிமல் திருமணம் செய்து கொண்டதால், தனது மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக கூறி ஆத்திரத்தில் இக்கொலையை செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading