Local

கொழும்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் வெளியானது!

கொழும்பில் சர்வதேச உணவகமொன்றில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்துச் சம்பவத்திற்கான காரணம், அங்கு ஏற்பட்ட சமையல் எரிவாயு கசிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு, ரீட் மாவத்தையில் உள்ள பழைய குதிரைப் பந்தய திடல் கேட்போர் கூட கட்டடத்தில் இயங்கி வரும் சர்வதேச உணவகமொன்றிலேயே (McDonalds) குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதுடன், தீ பரவலும் ஏற்பட்டிருந்தது.

கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த வெடிப்புச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனனர்.

குறித்த வெடிப்புச் சம்பவம் மற்றும் தீ பரவல் காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்திருந்தார்.

கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ், கறுவாத்தோட்டம் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளதாக  நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading