Local

பசிலுக்கு நிதியமைச்சராக பதவி வகிக்க உரிமை கிடையாது ராஜபக்ச தெரிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் போன்று நிதியமைச்சர் பதவியையும் வகிக்க பசில் ராஜபக்ஷவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷ வுக்கு உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக பசில் ராஜபக்ஷவை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading