World

தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்கொலை செய்துக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ,கொரோனா பெருந்தொற்றால் சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தற்கொலை செய்து இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ,சென்ற ஆண்டை விட சுமார் 100 தற்கொலை சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட் பெருந்தொற்றால் பள்ளி மற்றும் வீடுகளில் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றங்கள, குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading