Local

தலைமைத்துவத்தை நாமலுக்கு வழங்க ஜனாதிபதி யோசனை?

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கியமான பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும் அது குறித்த அறிவிப்பு விரவில் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது.

இதன்படி ,கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிப்பீடம் ஏற்றுவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த “வியத்மக” என்ற அமைப்பின் தலைவர் பதவியையே நாமலுக்கு வழங்க ஜனாதிபதி யோசனையை முன்வைத்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தின்போது இதற்கான யோசனையை ஜனாதிபதி முன்மொழிந்திருப்பதாகவும் அறியமுடிகின்றது. எனினும் இந்தக் கூட்டத்திற்கு வியத்மக அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா பங்கேற்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

மேலும் ,இந்நிலையில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படும் நிலையில் , விரைவில் நாமலுக்கு இப்பதவி அளிக்கப்படும் என்றே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading