World

26 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படும் பத்திரிகை!

ஹொங்கொங்கின் மிகப்பெரும் ஜனநாயக சார்பு செய்தித் தாளான அப்பிள் டெய்லி நிறுவனம் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமையன்று மூடப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் அப்பிள் டெய்லி அலுவலகம் அந்நாட்டு பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட 18 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

அதேவேளை அப்பிள் டெய்லியின் வெளியீட்டாளரும் ஹொங்கொங் ஊடக தலைவருமான ஜிம்மி லாய் கடந்த ஆண்டு இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அதன் தலைமை ஆசிரியரையும் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்செய்தித்தாள் நீண்ட காலமாக சீனாவின் பக்கத்தில் ஒரு எதிரியாக இருந்து வருகிறது, இது ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading