World

திடீரென இளவரசர் சால்ஸ்க்கு முத்தம் கொடுத்த பெண்!

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே மன்னரை வரவேற்கும் நிகழ்ச்சியில் திடீரென மன்னர் சால்ஸ்க்கு ஒரு பெண் முத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத் காலமாகி விட்ட நிலையில் புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றுள்ளார். மூன்றாம் சார்லஸ் மன்னரான இவரை வரவேற்க பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பால்மோரலில் இருந்து லண்டனுக்கு திரும்பிய அவர் தனக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடந்து வந்த போது அவரை திடீரென ஒரு பெண் முத்தமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் மேலும் ஒரு பெண் மூன்றாம் சார்லஸ் மன்னரின் கரங்களைப் பற்றி முத்திட்ட காட்சியும் வீடியோவில் வைரலாகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading