World

திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்த தடை!!

அமெரிக்க மாகாணமான தெற்கு டகோட்டாவில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக அம்மாகாண ஆளுநர்  தெரிவித்துள்ளார்.

அம் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், பாடசாலை அல்லது மாநிலத்திற்கு எதிராக அறிவிப்பு மற்றும் தடையுத்தரவு விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்த தடை | Transgender Banned From Using Public Restrooms

அமெரிக்காவில் இந்த தடையைப் பிறப்பிக்கும் 13ஆவது மாகாணம் இதுவாகும் என்பதோடு டென்னசி, மொன்டானா மாகாணத்திலும் குறித்த சட்டத்திற்கான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading