Local

திருமணம் செய்து கொள்ள இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் கொரோனாவுக்குப் பலி!

திருமணம் செய்து கொள்வதற்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் இந்த மாதம் திருமணம் செய்துக் கொள்ளவிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது. இத்தாலியின் மொன்சோ நகரத்தில் தொழில் செய்து வந்த இளைஞன் இலங்கை வந்துள்ளார்.

திருமணம் செய்துக் கொள்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இலங்கை வந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் 27 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்துள்ளார்.

இதேவேளை மகன் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரின் தாயும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்த தாயும் மகனும் தங்கொட்டு வடக்கு கோனவில கிராகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading