Local

ஊரடங்கு காலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள துறைகள்!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவாசாயத்துறை மற்றும் மருந்தகங்கள் வழமை போன்று இயங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளிலேயே தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்..

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading