Local

தலிபான்களுடன் இரகசியமாக இணைந்த பிரித்தானியர்கள்!

பிரிட்டிஷ் ஜிகாதிகள் ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் ரகசியமாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலிபான்கள் கைப்பற்றி பின், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் என பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, பிரிட்டிஷ் ஜிகாதிகள், திருட்டுத்தனமாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து ரகசியமாக தலிபானுடன் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேசும் நபர்கள் தலிபான் போராளிகளுடன் தொலைபேசியில் பேசியது பதிவுகள் கிடைத்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்ள் தெரிவித்துள்ளது.

மூத்த இராணுவ உளவுத்துறை வட்டாரம் கூறியதாவது, 30 வயதிற்குட்பட்ட இரண்டு பிரித்தானியர்கள் மொபைல்களில் வெளிப்படையாக தலிபான் போராளிகளுடன் பேசும் சில பதிவுகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

 அதில் ஒருவர் லண்டன் இங்கிலீஷில் பேசினார் இராணுவ உளவுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக பிரித்தானியர்கள் ஆயுதம் ஏந்தியதாக  intermittent உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் எத்தனை பேர் என்பதை கணிப்பது கடினம் என பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading