Cinema

திரைப்பட இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு!!!

தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்.

உடல்நலக்குறைவால் இன்று (15) தனது 58 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இதேவேளைக் கடந்த 2007 ஆம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘ பெரியார் ‘ படத்தில் அறிஞர் அண்ணாவாக இவர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading