Technology

தீப்பெட்டிக்குள் அடங்கிய புடவை நெசவாளரின் அசத்தலான செயல்!



இந்திய மாநிலமான தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தீப்பெட்டியில் டப்பாவில் பொருத்தக்கூடிய புடவையை நெய்து அசத்தியுள்ளார்.

தெலுங்கானா ராஜாண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பவரே இந்த புடவையினை நெய்துள்ளார்.

இந்த புடவையை தெலுங்கானா அமைச்சர் சபிதா இந்திரா நெட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதனை அவதானித்த அமைச்சர்கள் சிலர் குறித்த நெசவாளரை பாராட்டியதுடன் புடவை குறித்த தகவல்களையும் கேட்டறிந்தனர்.

தீப்பெட்டியில் பொருத்தக்கூடிய இந்த புடவையை உருவாக்க 6 நாட்கள் செலவானது என்றும், இயந்திரம் கொண்டு தயாரித்தால் வெறும் மூன்ற நாட்களில் தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

கையால் நெசவு செய்த இந்த புடவையின் விலை ரூ.12 ஆயிரம் என்றும், இயந்திரத்தின் மூலம் தயார் செய்யும் புடவையின் விலை ரூ. 8 ஆயிரம் என்றும் கூறியுள்ளார்.

சமீப காலமாகவே கைத்தறித் துறையில் பல மாற்றங்களை நெசவாளர்கள் கொண்டு வருகின்றனர்.

சிர்சில்லாவைச் சேர்ந்த நெசவாளர்கள் அதிநவீன தொழில் நுட்பங்களையும், நவீன கருவிகளையும் பின்பற்றி வருகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளர்.

விஜய் நெய்த புடவை இதற்கு முன்பு 2017ம் ஆண்டு நடந்த உலக தெலுங்கு மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் 2015ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு சூப்பர் ஃபைன் பட்டுப் புடவையை பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading