Local

துபாயில் உள்ள பாதாள குழுத் தலைவனை இலங்கைக்கு அழைத்து வர புதுத் திட்டம்

துபாயில் இருந்தவாறே இலங்கையில் பாதாள உலக குழுவை வழிநடத்தும் பிரபல பாதாள குழுத் தலைவனைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்புத் தரப்பு புதுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

இந்தக் குற்றவாளி உட்பட மேலும் பல பாதாள குழு உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை துபாய் அரசிடம் ஒப்படைத்து அந்த அரசின் ஊடாக அவர்களை கைது செய்வதற்கு அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இலங்கை பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹெரோயின் வியாபாரம்,கப்பம் மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களை துபாயில் இருந்துகொண்டும் சிறைச்சாலையில் இருந்து கொண்டுமே இந்த பாதாள உலக குழுவினர் செய்து வருகின்றனர் என்று புலனாய்வு பிரிவு தெரிவிக்கிறது.
இவர்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடி படை பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ விசேட கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading